ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அராஜக முறையில் பொலிசார் அடக்கியுள்ளதாகவும் இதில் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையும் மீறி...
ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அராஜக முறையில் பொலிசார் அடக்கியுள்ளதாகவும் இதில் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையும் மீறி அடாத்தாக கைது செய்துள்ளதாகவும் சட்டத்தரணிகளையும் ஆராஜக முறையில் கைது செய்துள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரேழுச்சி இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக வேலன் சுவாமிகள் தெரிவித்தள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட பேரணி பொலிசாரின் அடக்கு முறையால் தடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள வேலன் சுவாமிகள் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தமிழ் மக்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
75வது சுதந்திர தினத்தை யாழில் கொண்டாடுவதற்கு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய உணர்வுள்ள இளைஞர்களை ஒன்று சேர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றிணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.