நாங்கள் வேறு மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்கள் மதத்தவரை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என தவத்திரு அடியார் விபுலானந்த ...
நாங்கள் வேறு மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்கள் மதத்தவரை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என தவத்திரு அடியார் விபுலானந்த சுவாமி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் உடைய முகப்பு கடந்த காலங்களில் உடைக்கப்பட்டிருந்தது அதனை மீண்டும் புனரமைப்பதற்கான செயற்பாட்டினை எங்களுடைய அமைப்பு முன்னெடுத்திருக்கின்றது.சைவ சமயத்தவர்கள் ஆகிய நாங்கள் எமது மதத்தினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம் என தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் சைவசமயத்தவர்கள் மதமாற்றம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அதனை தற்பொழுது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றோம். அதேபோல ஏனைய இடங்களிலும் சைவர்களை மதமாற்றம் செய்பவர்களை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்கப்பட்டிருக்கின்றது.
மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சிவசேனை அமைப்பின் செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அவர்களின் பணியை எங்களுடைய அமைப்பும் செயல்படும் என்றார்.