19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு, அகமதாபாத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நரேந்திர மோடி மை...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு, அகமதாபாத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு,சபாலி வெர்மா தலைமையிலான இந்திய அணியைப் பாராட்டினர்.
அப்போது பேசிய சச்சின், பல கனவுகளை இந்திய மகளிர் அணி உயிர்ப்பித்து இருப்பதாகவும், ஒட்டுமொத்த தேசமும் மகளிர் அணியின் வெற்றியைக் கொண்டாடுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, பிசிசிஐ சார்பில் இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.