முல்லைதீவு,கரைத்துறைப்பிரதேசசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுடன் தமிழரசுக்கட்சி செய்த உடன்பாடு என்பது தமிழரசுக்கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசு...
முல்லைதீவு,கரைத்துறைப்பிரதேசசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுடன் தமிழரசுக்கட்சி செய்த உடன்பாடு என்பது தமிழரசுக்கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான ஒப்பந்தமா அல்லது சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான ஒப்பந்தமா என்பது தெரியாத நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், சுமந்திரன் எம்.பியின் செயற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி, குற்றச்சாட்டொன்றையும்
மேலும் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம்..
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாரதிராசா கிளிநொச்சியில் நின்றுள்ளார். வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்தின் பிரதிநிதித்துவமும் இன்றி, கரைதுரைப்பற்றில் போட்டியிடும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்த, சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களை பின்வாங்க வைத்த பின்னர்,தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை போட்டியிடவைக்கும் ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான ஒப்பந்தமா? அல்லது சுமந்திரனுக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்குமான ஒப்பந்தமா? என்பது எனக்குத் தெரியவில்லை.
ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது தமிழரசுக் கட்சியின் தலைவரும் இல்லை, செயலாளரும் அங்கு இருக்கவில்லை.
நான் இதை எப்படிப் பார்க்கின்றேன் என்றால் தமிழரசுக் கட்சியின் நடத்தைகளில், வேலைத்திட்டங்களில் கட்சியை விட சுமந்திரன் எடுப்பதுதான் தீர்மானம் போல் எங்களுக்குத் தெரிகின்றது.