அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு ...
அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவை நோக்கி இந்த ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது.
தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து புதிய பேரூந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்து பேருந்தில் பேரணிக்கு சென்றனர்.
குறித்த பேரணியில் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.