இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில தினங்களில் சந்தித்துப் பேசுவார் என தெரியவருகின்றது. இலங்கையின் ஜனா...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில தினங்களில் சந்தித்துப் பேசுவார் என தெரியவருகின்றது.
ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் இந்தியாவுக்கு சென்று பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயன்று வருகிறார்.
அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், பல வழிகளில் மோடியை சந்திக்க முயன்றும் ரணிலுக்கு தோல்வியே கிட்டியது.
அண்மையில், இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் மோடியை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்து சென்றுள்ளார்.
ஏற்கனவே, திட்டமிடப்பட்ட திகதியின்படி இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமரை சந்திப்பார் என்று அறிய வருகின்றது.