மிகையான குளோரின் ஊட்டத்தின் மூலமே யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று அழிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...
மிகையான குளோரின் ஊட்டத்தின் மூலமே யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று அழிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி,யமுனானந்தா தெரிவித்தார்,
தற்போது கிருமித் தொற்று நிலைமை சுமுகமாக உள்ளது இது ஒரு தற்காலிகமாக ஒரு ஏற்பட்ட பிரச்சனையே தவிர திட்டமிடப்பட்ட விடயம் அல்ல இந்த விடயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளது
இந்த நீர் தொற்றின் காரணமாக மருத்துவ நிபுணர்கள் தாதியர்கள் மற்றும் ஏனைய வைத்திய சாலையின் சுகாதார உதவியாளர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட 400 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள் சுமார் 50 பேர் அளவில்விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்கள்
எனினும் தற்போது பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை தற்பொழுது அந்த குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு அது தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார்,,