சீன நாட்டின் ரிக் ரொக் (TikTok ) செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது. குறித்த செயலியானது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்க...
சீன நாட்டின் ரிக் ரொக் (TikTok ) செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது.
குறித்த செயலியானது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்துவதாக கனேடிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் இந்த தீர்மானத்தால் தமது நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ரிக் ரொக் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இதேபோன்ற தடை அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் கனடா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.