யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பெறுவதிலும், வழங்குவதிலும் சிரமத்தை எதிர் நோக்குவதாக ஜனாதி...
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பெறுவதிலும், வழங்குவதிலும் சிரமத்தை எதிர் நோக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பிரதானி தனுஷ்க ராமநாயக்கவிடம் தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதி ஊடகப்பிரதானிக்கும் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடலின்போதே குறித்த விடயம் தொிவிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் பதவியேற்று ஒரு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் ஊடகவியலாளர்களை சந்தித்து கிடையாது. சந்திக்காவிடினும் மக்கள் பிரச்சினை தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில்
தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அவரை தொடர்பு கொள்வது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.