பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்குத் தேவையான பணத்தை வழங்கும் பொருட்ட...
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்குத் தேவையான பணத்தை வழங்கும் பொருட்டு, பாதுக்க தபால் நிலையத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு காசுக்கட்டளை “மணி ஓர்டர்” அனுப்பும் செயற்பாடு இன்று (22) பாதுக்க தபால் நிலையத்தில் இடம்பெற்றது.
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் குழு ஒன்று பாதுக்க தபால் நிலையத்திற்குச் சென்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் பெயருக்கு நூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபா வரை காசுக்கட்டளை மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.