யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று அனலைதீவில் இடம்பெற்ற அரசியல் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொட...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று அனலைதீவில் இடம்பெற்ற அரசியல் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொட்டார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்சிகளிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் அனலைதீவுக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
பின்னர் அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொட்டார்.
குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.