சீனாவில் மட்டுமே பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் தமிழகம் நாகை மாவட்டத்தில் மீட்கப்பட்டதனால் தீவிர விசாரணை இடம்பெறுகின்றது. அசிற்றிலின் கொள் சில...
சீனாவில் மட்டுமே பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் தமிழகம் நாகை மாவட்டத்தில் மீட்கப்பட்டதனால் தீவிர விசாரணை இடம்பெறுகின்றது.
அசிற்றிலின் கொள் சிலிண்டரே இவ்வாறு காணப்பட்டுள்ளது. இதனை சுவாசித்தால் மயக்கம் அல்லது மரணம் ஏற்படும். இது அதி பயங்கர நச்சுத் தன்மை கொண்டது.
இது பித்தளை ஒட்டுக்கு இதுவே பயன்படும். இருப்பினும் இந்த பதார்த்தம் 10 ஆண்டுகளின் முன்பே தடை செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் தற்போது எவ்வாறு அதன் வெற்று வாயு சிலிண்டர் கிடைத்தது என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் சரகம் நம்பியா நகர் மீனவ கிராமத்தின் கடற்கரையிலேயே இந்த சிலிண்டர் வடிவில் 3 அடி உயரமும் 2 அடி சுற்றளவும் உள்ள சுமார் 30 கிலோ நிறை கொண்ட சிலிண்டரே கடற்கரை ஓரத்தில் மீற்கப்பட்டுள்ளது.