வட மாகாண சுகாதார பணிப்பாளர் திலீப் லியனகே தனது பணிமனையில் கடமையாற்றும் சுகாதார பெண் ஊழியர்களை தனது வீட்டு வேலைகளை பார்ப்பதற்காக சுழற்சி மு...
வட மாகாண சுகாதார பணிப்பாளர் திலீப் லியனகே தனது பணிமனையில் கடமையாற்றும் சுகாதார பெண் ஊழியர்களை தனது வீட்டு வேலைகளை பார்ப்பதற்காக சுழற்சி முறையில் பயன்படுத்துவது அம்பலமாகி யுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது வட மாகாண சுகாதார பணிப்பாளர் யாழ்பண்ணையில் அமைந்துள்ள தனது உத்தியோபூர்வ வீட்டில் வேலை செய்வதற்காக வடக்கு சுகாதார பணிமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் நிரந்தர சுகாதார ஊழியர்களை பயன்படுத்தி தனது வீட்டு வேலைகளை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக ஆண் ஊழியர்களை முதலில் வீடு கூட்டுதல், கழுவுதல் , மற்றும் ஆடைகளை துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வந்த நிலையில் அவர்கள் மறுப்புத் தெரிவித்த நிலையில் தற்போது பெண் ஊழியர்கள் இவ்வாறான பணிகளில் ஈடுபடுத்துகிறார்.
தமது வேலைக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுவோ என அஞ்சி பெண் ஊழியர்கள் வேறு வழி இன்றி வீட்டு வேலைகளில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது.
எனினும் குறித்த விடையம் தொடர்பில் உயர் மட்டங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென சுகாதார பணிப்பாளரின் வாசல் தலம் முற்றுகையிடப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.