உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக தேர்தகள் ஆணைக்குழுவிற்கும் நீதிமன்றத்திற்கும் திறைசேரி அறிவித்துள்ளது.
இதனால், உயர் நீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்தப்படி மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவும் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற கேர்ணல் டப்ளிவ்.எம்.ஆர். விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.