உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை மே மாதம் 11ம் திகதி வரை ஒத...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை மே மாதம் 11ம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்;.விஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றன.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் இன்றைய தினம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இந்த வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 11ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் அடுத்த மாதம் 9ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.