பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீப்பிடித்ததில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த கப்பலில் இருந்த 230 பே...
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீப்பிடித்ததில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த கப்பலில் இருந்த 230 பேரை நிவாரணக் குழுவினர் காப்பாற்றினர்.
நேற்று (29) இரவு குறித்த கப்பலின் குளிரூட்டும் அறையிலிருந்து தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு 6 மாத குழந்தை உட்பட 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தீப்பிடித்தபோது கப்பலில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.