கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலி...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 6 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது
உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் இன்றைய தினம் கோப்பாய் பொலிசார் 38 வயதுடைய குறித்த பெண்மணியை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 6 லீற்றர் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.