நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளியில் கல்வி பயிலும் 17 முன்பள்ளி மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்...
நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளியில் கல்வி பயிலும் 17 முன்பள்ளி மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையிடம் நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளியின் பொறுப்பாசிரியரும் நவாலி வடக்கு சனசமூக நிலையத் தலைவருமான செந்தினி தருமசீலன் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த உதவி வழங்கப்பட்டது.
அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான திரு விசுவாசம் செல்வராசாவின் நிதி ஏற்பாட்டில் முப்பதினாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை அறக்கட்டளையின் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், ஆலோசகர் இ.மயில்வாகனம், நிர்வாகசபை உறுப்பினர்,சா.தவசங்கரி ஆகியோர் வழங்கி வைத்தனர்.
மேலும் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களான ராஜ்மோகன் கல்சியா, தினேஸ் மைதிலி, நவாலி வடக்கு சனசமூக நிலைய நிர்வாகிகளான போசகர், தர்மலிங்கம் கணேசலிங்கம், உப செயலாளர் சுபாசினி ஜெனன்,உப தலைவர் க.திருநாவுக்கரசு ஆகியோரும் கலந்துகொண்டனர்.