தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தினத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தரப்புக்கள் இரு பிரிவாக மேற்கொண்டனர். இன்று காலை 9.30 மணியளவில் நடைபெ...
தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தினத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தரப்புக்கள் இரு பிரிவாக மேற்கொண்டனர்.
இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தரப்பும் காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்பும் தனித்தனியாக பங்கேற்றனர்.
தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.
பின்னர் காலை 10 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சீ.வி.கே சிவஞானம்,மூத்த பத்திரிகையாளரும் தமிழரசுக்கட்சி யாழ் மாநகர சபை வேட்பாளர் என்.வித்தியாதரன்,வலி வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக காலை 8 மணியளவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
கட்சியின் ஸ்தாபகர் தலைவர் தந்தை செல்வாவின் நிகழ்வின் போது கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இரு தரப்பாக நின்று அஞ்சலி செலுத்தியமை பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.