அரசிற்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம்மின் (SLT) பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரி செயலாளர் ஸ்ரீலங்கா டெலிக...
அரசிற்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம்மின் (SLT) பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரி செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்கு உரிமை அரசாங்கம் சார்பில் திறைசேரி செயலாளரிடம் உள்ளதுடன், பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு சொந்தமான வர்த்தக மறுசீரமைப்பு பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
இது குறித்து ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இன்று (20) கொழும்பு பங்குச் சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.