ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்ப...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.