திரைப்படம் வெளியாகி இவ்வளவு மாதங்களான பிறகு ஏன் இவ் திரைப்படம் பற்றிய கருத்து என்கின்ற சிந்தனை எழத்தான் செய்யும். நான் சற்று வித்தியாசமாக இவ...
திரைப்படம் வெளியாகி இவ்வளவு மாதங்களான பிறகு ஏன் இவ் திரைப்படம் பற்றிய கருத்து என்கின்ற சிந்தனை எழத்தான் செய்யும். நான் சற்று வித்தியாசமாக இவ் திரைப்படத்தை பார்த்தேன். பொதுவாகவே வீட்டில் யாரும் இறந்தால் இறந்தவரது ஆவி நடமாட்டம் காணப்படும் என்கின்ற பீதி எம்மவர்களிடம் காணப்பட்டு வருகின்றது. ஒருவருக்கு பேய் பிடித்து விட்டாலே உடனடியாக கூட்டிச் செல்வது கோயில்களுக்கு. மாந்திரீக சிந்தனைகள் தான் எமது முன்னோர்களிடமிருந்து கடத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் இவ் முறைகளைப் பின்பற்றி வருபவர்களும் இருக்கிறார்கள். இன்று நாம் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இருக்கின்றோம். இத்தகைய தொழில்நுட்பத்தினூடான மாற்று சிந்தனையை முன்வைத்த திரைப்படம் தான் கனெட். 2022 டிசெம்பர் 22ம் திகதி இவ் திரைப்படமானது வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கனெட். மாயா இ கேம் ஓவர் படங்களில் அதிகமான பயங்காட்டிய இயக்குநர் இவ் படத்திலும் அதே பயத்தினைக் காட்ட முயற்சித்திருக்கிறார். கொரோனா காலத்தில் ஜீம் மீட்டிங் இ வீடியோகோல் இ வியாபாரம் என கற்றுக்கொண்ட நமக்கு அதே முறையில் பேயினை விரட்டும் முறையை சொல்லி இருக்கிறது இவ் திரைப்படம்.
மருத்துவரான ஜோசப் (வினய்) இவரின் மனைவி சூசைன் (நயன்தாரா) இவர்களுக்கு ஒரு மகள் அனா (ஹனீயா நபீசா). நயன்தாராவின் அப்பாவாக ஆர்தர்(சத்யராஜ்) என மகிழ்ச்சியாக இவர்களின் குடும்ப வாழ்க்கை. அப்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதனால் அதை தடுக்க அரசாங்கம் ஊரடங்கு போடுகின்றது. கொரேனா காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலை இ வைத்திய சேவையின் மகத்துவம் போன்றவற்றினை இவ் திரைப்படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது என்று தான் கூறவேண்டும்.
மருத்துவமனைவியில் தங்கி அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நயன்தாராவின் கணவர் வினய். கொரோனா நோய் தாக்கி இறந்துபோகின்றார். இதனால் இவர்களது குடும்பமே நொறுங்கிபோய்விடுகிறது. இவர்களுக்கு ஆறுதலாக அவ்வப்போது இவர்களிடம் வீடியோகோலில் ஆர்தர்(சத்தியராஜ்) பேசி வருகிறார். இதே நேரத்தில் சூசனுக்கும் அனாகாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்துவிட வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
இவர்களுடைய மகள் அனா தனது தந்தையின் இறப்பினை தாங்கமுடியாமல் தந்தையுடன் பேசவேண்டும் என முடிவு செய்கிறாள். மீடியேட்டர் (ழுரதைய டீழயசன) உதவியுடன் அனா தனது தந்தை ஆவியுடன் பேச முயற்சிக்கிறாள். இதன் விளைவாக இறந்த தந்தையின் ஆத்மாவுடன் பேச முயலும் போது என்ன விபரீதம் நடந்தது என்ற திக் திக் நிமிடங்கள் தான் படத்தின் மிகுதிக்கதையாகும்.
மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவும் அவர் பயன்படுத்திய லைட்டிங்கும் ரிச்சர்ட்கெவினின் படத்தொகுப்பும் பிரித்விசந்திரசேகரின் பின்னணி இசையும் இ சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரனின் ஒலி வடிவமைப்பும் உதவியாக அமைந்துள்ளது. ஆனால் இது மட்டும் திரைப்படத்திற்கு போதுமானதல்ல.
மகளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதைப் புரிந்து தவிக்கும் தாயின் மனநிலை அவளை மீட்க போராடும் நிலை என்பவற்றையும் அழகாகக் காட்டியுள்ளனர். கொடுமையான பேயை விரட்டும் மும்பை பாதிரியார் (அனுபம் கெர்) தனக்கான பாத்திரப்படைப்பை மிக அழகாக செய்துள்ளார்.
வித்தியாசமான முறையில் திரைப்படம் அமைக்கப்பட்டாலும் அதனைப் பார்க்கின்ற பெறுநர்கள் மத்தியில் பல விமர்சனப் பார்வை எழத்தான் செய்கின்றது. வயது வந்த மகளுக்கு அம்மாவாக நடிப்பது சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. அழுது நடிக்கின்ற காட்சிகளில் அப்பட்டமாக செயற்கைத் தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கிறிஸ்தவ மக்களின் மதம் சார்ந்த வாழ்வியல் துல்லியமாக விவபரிக்கப்படுவதால் மறைமுகமாக மதப் பிரச்சாரத்தை வலியுறுத்துவது போன்ற உணர்வை இவ் திரைப்படம் கொடுத்துள்ளது.
‘ஆன்லைன் மூலம் பேயோட்டுதல்’ என்பது புதுமையான விடயமாக எம்மவர்களுடன் கனெக்ட் ஆகியுள்ளது இவ் கெனக்ட் திரைப்படம். டெக்னிக்கலாக படம் ரசிக்க வைக்கும் அளவிற்கு கதை இன்னும் வலுவாக அழுத்தமாக அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
கிசோபனா சுந்தரலிங்கம்
ஊடகக்கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்