மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியருக்கு தாதி ஒருவர் கொடுத்த பாலை குடித்ததால், சுகவீனமடைந்ததாக கூறப்படும் சம்பவம் தொ...
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியருக்கு தாதி ஒருவர் கொடுத்த பாலை குடித்ததால், சுகவீனமடைந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மஹரகமவை வசிப்பிடமாகக் கொண்ட 53 வயதுடைய வைத்தியர் கடந்த 7ஆம் திகதி சுகவீனமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த வைத்தியர் கடமையில் இருந்த போது தாதி ஒருவரினால் ஒரு கோப்பை பால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை அருந்திய வைத்தியர் தனது கடமைகளை முடித்துக் கொண்டு தனது விடுதிக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வைத்தியசாலைக்கு வைத்தியர் வராததால் ஊழியர் ஒருவர் அவரை தேடி சென்றுள்ளார்.
இதன்போது வைத்தியரின் உடல்நிலை மோசமானதால் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் நச்சுப் பொருளை உட்கொண்டதன் காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.