சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
உணவு திருவிழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உள்ளூர் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவுத் திருவிழாவுடன் பாரம்பரிய இசை நிகழ்வும் இடம்பெற்றது.பாரம்பரிய இசை நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களை கௌரவித்து அமைச்சர் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.