வடமாகாணத்தைப் பொறுத்த வரை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் அக்கறை காட்டுவதில்லை என்பது இரு தடவைகள் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பு...
வடமாகாணத்தைப் பொறுத்த வரை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் அக்கறை காட்டுவதில்லை என்பது இரு தடவைகள் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்களின் புள்ளி விபரங்களில் இருந்து தெரிகிறது.
அதாவது இரு தடவைகள் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் 65.90 வீதத்தை தாண்டவில்லை. என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணமாகப் பார்க்கப்படுவது போரினால் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியாமல் கஷ்ரத்தின் மத்தியில் மக்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள். இந்த நிலையில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதி என்பது கட்சிகளின் தேர்தல் பரப்புரையாக மட்டுமே இருந்து வருகிறது. இப்படியாக மக்களின் மூளையை சலவை செய்து பதவிக்கு வந்தவர்கள் பின்னர் வாக்களித்த மக்கள் பற்றி கருத்திலும் எடுப்பதில்லை . இதன் காரணமாக மக்களின் வாக்குவீதம் குறைகிறது.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். மக்களின் அபிவிருத்தி வேலைகள் கிடப்பில் கிடப்பதாகவும், தேர்தல் இடம்பெறும் பட்சத்தில் இதனை நிவர்த்தி செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். வர்த்தகர்களும் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு அத்தியாவசியப் பொருள்களின் அதிகரித்த விலைகளை குறைக்க முடியாமல் அரசு இருக்கின்ற நிலையில் எப்படி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற கருத்துகளுக்கு மத்தியில் அரசியல்வாதிகளால் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கிய கடன் பின்தங்கியிருக்கும் நாட்டை எந்தளவுக்கு முன்னுக்கு கொண்டுவரும் என்பது காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கடனைப் பெற்றுவிட்டு இலாபம் பெற்றுவிட்டதாக மார்தட்டும் அரசியல்வாதிகள் அந்த கடனை திருப்பி எப்படி கொடுக்கப் போகிறோம் என்ற சிந்தனையில்லாமல் இருப்பவர்களுக்கு உள்ளூராட்சி சபை தேர்தல் அவர்களுக்கான வழி என்றுமே நினைக்கிறார்கள் மக்களுக்கான வழியையும் பற்றி சிந்திப்பதில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25 நடத்தப்படாது ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் அல்லது அடுத்த ஆண்டு ஐனவரி மாதம் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு எவருக்கும் விருப்பமில்லை, ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல, கூடியவிரைவில் தேர்தலை நடத்துவோம் என்று சொல்பவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதுடன் அவர்களது செயற்பாடு நின்றுபோகிறது.
2011, 2018 இரு தடவைகள் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெற்றுள்ளன. வடமாகாணத்தைப் பொறுத்தவரை உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சிகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு கட்சி இன்னொரு கட்சி உறுப்பினர்களை மிரட்டுவது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பின் தொடர்ந்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
மேலும் தேர்தல் காலங்களில் கட்சிகள் உதவித்திட்டங்களை மேற்கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறியமை மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் நின்று வாக்களிக்க வரும் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியமை, போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளினதும் சுயேச்சைகளினதும் எண்ணிக்கை 19, போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 3358, அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 65.90 வீதம், முறைப்பாடுகளின் எண்ணிக்கை 85, வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 521, ஏற்பட்ட நிதி செலவு 55616648.33 ரூபா என
யாழ் தேர்தல் அலுவலகம் தெரிவிக்கிறது.
2023 உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா ? என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இருக்கிறது. யாழில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றனர். 13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும், 15 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்புமனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றனர். 514 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும், 15 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 425 வேட்பாளர்களுமாக 4111 பேர் போட்டியிடவுள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது நாட்டுக்கு சுமை, ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சொன்னார்கள் நடவடிக்கை இல்லை.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக ஊடகம் செய்தி வெளியிடுகிறது.
அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தயாராகும் வகையில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்திலும் ஜக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களிடமும் ஜனாதிபதி இது தொடர்பில் பேசியுள்ளார். அப்படி இருந்தும் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் 8 ஆயிரம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றங்களை நடத்துவது கடினம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக செய்தி வெளிவந்துள்ளது.