நாட்டில் பல மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகபடுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்க...
நாட்டில் பல மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகபடுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல மசாஜ் நிலையங்கள் விபச்சார விடுதிகளாக இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அனைத்து மசாஜ் நிலையங்களும் உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்படவேண்டும்.
எனினும், அவை மேற்பார்வைக்கு உட்பட்டவை அல்ல. மேலும், இந்த மசாஜ் நிலையங்களில் உள்ள ஆயுள்வேத சிகிச்சையாளர்கள் பலர் முறையான பயிற்சிகளை பெறாதவர்கள் ஆவார்.
இதன் விளைவாக, ஆயுள்வேத சிகிச்சையாளர்கள் ஆவதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு தேசிய தொழில்தகமை சான்றிதழ் (நிலை 04) பெறுவதற்கு ஏற்றவகையில் புதிய நான்கு மாத பாடநெறியை ஆயுர்வேத திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.