யாழில் பக்கத்து வீட்டைப் பார்க்காமல் கட்டடம் அமைத்ததால் நெருக்கடிக்கு உள்ளானவர் நீதி வேண்டி யாழ்.மாநகர சபையின் முன்னால் இன்று (20) காலை 8.3...
யாழில் பக்கத்து வீட்டைப் பார்க்காமல் கட்டடம் அமைத்ததால் நெருக்கடிக்கு உள்ளானவர் நீதி வேண்டி யாழ்.மாநகர சபையின் முன்னால் இன்று (20) காலை 8.30 மணியளவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இல 72 யாழ். பருத்தித்துறை வீதியில் குடியிருக்கும் த.பிரபாகரன் என்பவரே இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
மழை காலங்களில் தனது வீட்டு வளவில் வடிந்தோட முடியாது வெள்ளம் நிற்பதாகவும். அவர்கள் பயன்படுத்தும் கழிவுநீர் கூட தனது வீட்டு சுவரை ஈரப்படுத்தி வீட்டினுள் மணம் வீசுவதாகவும் இதற்கு தீர்வைப் பெற்று தருமாறு கோரி இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தீர்வு வேண்டி 7 வருடங்களாக யாழ். மாநகர சபையிடம் முறையிட்டும் எந்தவிதப் பயனுமின்றி இருப்பதால் இன்று மாநகர சபை முன்னால் நீதி வேண்டி போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இவர் வசிக்கும் குடியிருப்பு சிவன் கோவிலுக்கு உரித்துடையது என்றும் கோவில் உரிமையுடைய செட்டியார் வந்தால் தான் இதற்கு தீர்வைப் பெற முடியும் என்று மாநகர சபை தெரிவிக்கிறது.
கோவில் காணி என்றால் குடியிருப்பவர் பாதிக்கப்படுவது தொடர்பில் மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியாதா? என்று போராட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவிக்கிறார்.