2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான 06 ஆம் தரத்திற்கு அனுமதிப்பதற்க...
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான 06 ஆம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை இணையவழி (Online) மூலமாக சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2023.04.20 மதியம் 12.00 முதல் 08 மே 2023 நள்ளிரவு 12.00 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி ஊடாக விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளத்திற்குச் சென்று சமர்ப்பிக்கலாம்.
மேலும், பாடசாலை விண்ணப்பம் தொடர்பான பாடசாலை கணக்கெடுப்பு எண் (Census No.) கொண்ட ஆவணத்தை www.moe.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்