கொலன்னாவ – ஒபேசேகரபுர பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவனை வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடவைச் ...
கொலன்னாவ – ஒபேசேகரபுர பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவனை வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடவைச் சேர்ந்த குறித்த பெண், சிறுவனுக்கு ஹெரோயின் போதைப் பொருளை வலுக்கட்டாயமாக கொடுத்து, வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்
வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் குறித்த சிறுவனை அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள சிறுவர் இல்லமொன்றிலிருந்து அழைத்துச்சென்று பின்னர் தனது மகனுடன் வீதியில் யாசகத்துக்காக அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவனின் வாய் மற்றும் தொடை உட்பட பல்வேறு பகுதிகளில் பல தீக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.