கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிக...
கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் சுமார் 750 பேரை கொண்ட குழுவொன்று, அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படவுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார், வி;சேட அதிரடிபடையினர், கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் முப்படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு சுதந்திர சதுக்கம், கொள்ளுபிட்டி முச்சந்தி, அலரிமாளிகை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.