சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவு...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும்,இன்று (செவ்வாக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து, கைது செய்யப்பட்ட இவர்கள், நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தட்டமையும் குறிப்பிடத்தக்கது,.