கொழும்பு – துறைமுக நுழைவாயில் பகுதிக்கு அருகில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 08 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைய...
கொழும்பு – துறைமுக நுழைவாயில் பகுதிக்கு அருகில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 08 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புளூமெண்டல் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் 06 ஆவது நுழைவாயிலுக்கு அருகில், துறைமுகத்திற்கு சொந்தமான இரும்புகளை திருட வந்ததாக கூறப்படும் இருவரை விசாரணை செய்த போது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் அங்கு வந்த அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது, தனியார் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறிக்க சிலர் முயற்சித்த சந்தர்ப்பத்தில், மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.