16வது IPL போட்டி தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், கிண்ணத்தை தனதாக்கியது. மழை காரணமாக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டி, CSK அணிக்கு 17...
16வது IPL போட்டி தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், கிண்ணத்தை தனதாக்கியது.
மழை காரணமாக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டி, CSK அணிக்கு 171 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
இதன்படி, 15 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
அணித் தலைவர் மகேந்திர சிங் தோணி முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்திருந்தார்.
இரண்டாம் இணைப்பு
IPL 2023 :- ஆட்டத்தை ஆரம்பித்தது CSK
மழை காரணமாக தடைப்பட்ட IPL இறுதி போட்டி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டு, 171 என்ற வெற்றியிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
IPL 2023 BREAKING NEWS :- CSK களமிறங்கிய அடுத்த தருணத்தில் போட்டி தடைப்பட்டது.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் IPL இறுதி போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.
நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய சென்னை சுப்பர்ஜஐ கிங்ஸ், முதலில் கள தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சாய் சுதர்ஷன் 96 ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு 215 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மூன்று பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களை பெற்ற நிலையில், போட்டிக்கு மழை குறுக்கிட்டது.
இதனால், இறுதி போட்டி தடைப்பட்டுள்ளது.