பொசன் போயா தினத்தை முன்னிட்டு 440 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளார். அதன்படி கைதிகள் இன்று (சனிக்க...
பொசன் போயா தினத்தை முன்னிட்டு 440 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளார்.
அதன்படி கைதிகள் இன்று (சனிக்கிழமை) காலை இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 434 ஆண் கைதிகளும் ஆறு பெண் கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
24 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்லேகலவில் 87 பேரும் மஹரவில் 43 பேரும், தல்தெனைவில் 39 பேரும், வீரவிலவில் 37 பேரும் பல்லன்சேனவில் 26 கைதிகளும், வெலிக்கடையில் 22 கைதிகளும், மட்டக்களப்பில் இருந்து 21 கைதிகளும் இன்று காலை விடுதலை செய்யப்பட உள்ளனர்.