வடக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அ...
வடக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் உப தலைவர் அந்தோணிப் பிள்ளை பிரான்சிஸ் ரட்ண குமார் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை யாழ் ஊடகம அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில
இந்திய மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையினால் யாழ் மாவட்ட மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்ற வாரம் எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபட்ட நான்கு இந்திய படகுகள் கைது செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்த சுமார் இருபது பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் 400 மேற்பட்ட எல்லை தாண்டிய படகுகள் எமது கடற் பரப்புக்குள் வரும்போது நான்கு படங்களை மட்டும் பிடித்துவிட்டால் போதாது.
எதிர்வரும் மாதம் இந்தியா செல்ல வுள்ள எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
குறித்த சந்திப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழுத்திக் கூற வேண்டும்.
ஏனெனில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் எமது கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதுடன் எமது கடல் வளங்களும் அழிக்கப்படுகிறது.
ஆகவே நமது நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்ற ஜனாதிபதி எமது மக்களின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வரும் நிலையில் மீனவ சமூகங்களின் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.