யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பொதுச்சந்தை அமைந்துள்ள பிரதேசத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் சிரமதானம் முன்னெடுக்கப...
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பொதுச்சந்தை அமைந்துள்ள பிரதேசத்தினை
அழகுபடுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உடுவில் உப அலுவலக ஊழியர்களும் மருதனார்மடம்
பொதுச்சந்தை வியாபாரிகளும் இணைந்து இன்று திங்கட்கிழமை(05)
9 மணி முதல் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வலிகாமம் தெற்கு பிரதேச சபை செயலாளர் சாரதா உருத்திரசம்பவன் உள்ளிட்ட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மருதனார்மடம்
பொதுச்சந்தை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பங்கேற்றனர்.
மேலும் மருதனார்மடம்
பொதுச்சந்தை வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான குறியீடுகள் தீட்டும் பணியும் இடம்பெற்றது.