பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரிகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெருக்கடி...
பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரிகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு முக்கியமான வரவு செலவுத் திட்டம் மற்றும் நலன்புரி ஆதரவை வழங்கும் என நம்பப்படுகிறது.
மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன்( IMF) இலங்கை ஒரு ஒப்பந்தத்தை எட்டியதன் பின்னர் இந்த ஒதுக்கீடு மிகப்பெரிய நிதி உதவியாக அமைகிறது.
700 மில்லியன் மொத்த தொகையில் 500 மில்லியன் டொலர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத் திட்ட உதவிக்காக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள $200 மில்லியன் நலன்புரி ஆதரவை நோக்கி, குறிப்பாக தற்போதைய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்காக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.