சில நாய் இனங்கள் உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை வீடுகளில் வளர்க்க தடை விதித்து எகிப்து அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு கிள...
சில நாய் இனங்கள் உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை வீடுகளில் வளர்க்க தடை விதித்து எகிப்து அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அண்டை வீட்டாருடன் சண்டை பிடித்த ஒருவரை Rottweiler நாய் கடித்து குதறியதில் அவர் உயிரிழந்தார்.
இதனால் நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து, புது சட்டத்தை எகிப்து அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி, Pitbulls, Rottweilers, German Shepherds, Huskies, Caucasian Shepherds, Bullmastiffs, Dobermans, Alaskan Malamutes, Great Danes, Akitas, American Bullies, Alpine Mastiffs, Dogo Argentinos, Cane Corsos, Tosa Inus போன்ற நாய் இனங்கள் ஆபத்தானவை என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நாய்களை வளர்ப்போர் ஒரு மாதத்திற்குள்ளாக கால்நடை மருத்துவமனைகளில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எகிப்தின் ‘ஆபத்தான விலங்குகள்’ சட்டம் ஜூன் 14 முதல் நடைமுறைக்கு வந்தது. அதில் நாய்களை வைத்திருப்பதற்கான புதிய விதிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.