இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த செந்தில் தொண்டமான், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL லிமிடெட் உடன் தொழிற்நுட்ப துறையை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, புதுடெல்லியில் HCL லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளை சந்தித்த ஆளுநர், இலங்கையின் 5000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்திஇருந்தார்.
மேலும் ஆளுநரின் முன்மொழிவானது HCL லிமிடெட் நிறுவனம் மத்தியில் பெரும் வரவேற்ப்பினையும் பெற்றுள்ள அதேநேர்ம HCL லிமிடெட் நிறுவனமானது இலங்கையில் அவர்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் வழங்கியுள்ளது.
ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் விளைவாக, HCL லிமிடெட், முதலீட்டுச் சபையுடன் (BOI) உடன்படிக்கையில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள இலங்கையில் உறுதுணையாகப் பங்காற்றியிருக்கும் (BOI) தலைவர் தினேஷ் வீரக்கொடியின் ஆலோசனையின் பேரில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் செந்தில் தொண்டமானினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முக்கிய முயற்சியானது இலங்கை முழுவதும் 5000 IT பொறியியலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அத்தோடு இது நாட்டின் வரலாற்றில் IT துறையில் மிகப்பெரிய முதலீடாகவும் அமைந்துள்ளதுடன்,அந்நிய செலாவணியை அதிகரிப்பதில் முக்கிய பங்களிக்கிறது.