ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றில், சிம்பாப்வே அணி தனது கடைசி ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்திட...
ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றில், சிம்பாப்வே அணி தனது கடைசி ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது. இதையடுத்து உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.
சூப்பா் சிக்ஸ் அட்டவணையில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ண போட்டிக்குத் தகுதிபெறும் நிலையில், அந்த அணி 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை 8 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்திருக்க, 6 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.
முன்னதாக, சிம்பாப்வேயுடனான ஆட்டத்தில் முதலில் ஸ்காட்லாந்து 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ஓட்டங்கள் சோ்க்க, சிம்பாப்வே 41.1 ஓவா்களில் 203 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனிடையே, 7-ஆவது இடத்துக்கான பிளே-ஓஃப் ஆட்டத்தில் அயா்லாந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியமு குறிப்பிடத்தக்கது.