யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டையில் இருந்து காங்...
யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.
மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து நேர்ந்துள்ளது.