யாழ்.கோப்பாய் தேசோதய சபையினால் உரும்பிராய் கிழக்கு ஜெயபுரம் அண்ணா ஸ்ரார் உதைபந்தாட்ட அணிக்கு தேவையான உடுப்புகள் (JC ) விளையாட்டு உபகரணங்கள்...
யாழ்.கோப்பாய் தேசோதய சபையினால் உரும்பிராய் கிழக்கு ஜெயபுரம் அண்ணா ஸ்ரார் உதைபந்தாட்ட அணிக்கு தேவையான உடுப்புகள் (JC ) விளையாட்டு உபகரணங்கள் இன்று(18) வழங்கி வைக்கப்பட்டன.
கோப்பாய் தேசோதய சபைத் தலைவர் இ.மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமுக செயற்பாட்டாளர் தே.றமணதாசன் மற்றும் சமாதான நீதவான் சா.தவசங்கரி கலந்து கொண்டனர்.
கொலண்ட் நாட்டில் வசிக்கும் மு.லலிதா குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் இந்தப் பொருள்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உரும்பிராய் கிழக்கில் பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு நான்கு சக்கர வண்டில் ஒன்றும் அக்குடும்பத்தினரின் வேண்டுதலின் பெயரில் வழங்கப்பட்டது.