2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 27 ஓட்டங்களால் வ...
2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கண்டி அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, பாபர் அசாம் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், 158 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கண்டி அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக, ஏஞ்சலோ மெத்யூஸ் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய கண்டி அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
இதேவேளை, இன்று இடம்பெற்ற மற்றுமோரு போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.