அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது. கடந...
அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த மே மாதம் இராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது.
ஆனால் ரொக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என வட கொரியா தெரிவித்தது.
இந்நிலையில் உளவு செயற்கை கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவிக்கையில், வடகொரியா வரும் நாட்களில் உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
வருகின்ற 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்குள் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்து வடகொரியா அதிகாரிகள் தெரிவித்ததாக ஜப்பான் கடலோர காவல் படை குறிப்பிட்டுள்ளது.
வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவவுள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்று கடலோர காவல் படை ஊடகப் பேச்சாளர் ஹிரோ முனே கிகுச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் ஏவப்பட்ட உளவு செயற்கைக் கோளை போலவே இருக்கலாம் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.