யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந...
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் குறித்த சந்தேகநபர் சுற்றி வளைக்கப்பட்டதுடன் அவரிடமிருந்து 500 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தை சேர்ந்த 23 வயதான குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.