நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக அதிகாரப்...
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கியது.
அதிலும் விஜய்யின் மகன் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் புதிய படத்தையும் லைகா புத்திசாலித்தனமாக லாக் செய்துள்ளது.
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர்.
ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கி உள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார்.
இந்த புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டு ஜேசன் விஜய்யை இயக்குனராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளனர்.