வைத்தியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வதனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ...
வைத்தியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வதனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமாயின் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் தொழில் வல்லுநர்களின் வெற்றிடத்தை நிரப்ப முடியாத பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது விதிக்கப்படுகின்ற வரி கட்டணத்துக்கு அமைய, வைத்தியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டிலிருந்து வெளியேறுபவர்களை விமான நிலையத்தில் வைத்து தடுப்பதை விடுத்து பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைத்தியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இலங்கையின் வளம் இல்லாமல் போவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.