2023ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரி...
2023ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம், 1 இலட்சத்து 71 ஆயிரத்து 15 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் மாத்திரம் 24 ஆயிரத்து 578 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அத்துடன் 2022ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 56 பேர் மாத்திரமே தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.