முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தாமாகவே முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்திருந்ததாகவும், அந்த வழக்குகளில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டிருந்ததால்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தாமாகவே முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்திருந்ததாகவும், அந்த வழக்குகளில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டிருந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால், ஒரு நீதிபதி என்ற ரீதியில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தேவையான பிடியாணைகளை பிறப்பிக்கும் அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும், அவருக்கான பாதுகாப்பு தொடர்ந்தும் பேணப்பட்டு வந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.