முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று(11) ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அகழ்வுப் பணிகள் நிறைவட...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று(11) ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தது.
இதன்போது இன்றைய தினம் மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் இதுவரை ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடப்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக குவிந்து கிடப்பதனால் சரியாக எத்தனை சடலங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியாது உள்ளது என தெரிவித்தார்.